அமுதம்
இந்நூலில் மழலையர், தமிழ் எழுத்துகளுடன் அவற்றிற்கான சொற்களையும் அறிந்து கொள்ளும் வண்ணம் ஒவ்வொரு எழுத்துக்கான சொற்களும் படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தாம் கற்ற எழுத்துகளின் பயன்பாட்டை அறிந்திடும் வகையில் சொற்களும் சொற்றொடர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, சொற்களின் பொருள் மற்றும் எதிர்ப்பதம், தமிழ் இலக்கணம், தமிழ் நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள், தமிழ் செய்யுள்கள், அவற்றின் சிறப்புகள் ஆகியனவையும் அடங்கும். மேலும், மாணவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான சில அறிவுரைகளும், அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாடு பாடநூல் கழக பாடநூல்களின் அடிப்படையில் பயிற்சிக்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூலில் எழுத்துப் பயிற்சி மட்டுமின்றி, மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வாக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாக்கியங்கள் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்ற நூல்களிலிருந்து தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் விடுகதைகள், பொது அறிவு, பழமொழிகள், தமிழ் இலக்கியம் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் மூலம் நம் தாய்த்தமிழ் மொழியின் எழுத்துகளை பயின்று இன்புறுவோம்!